மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2023 3:15 AM IST (Updated: 28 Aug 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வால் இதுவரை 23 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து உள்ளனர். அதற்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மண்ணரசன், தமிழக பெண்கள் இணைப்புக் குழு தலைவர் சாராள், மக்கள் அதிகாரம் மாவட்ட இணை செயலாளர் வெங்கட் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மக்கள் அதிகாரம் நிர்வாகி ராஜா நன்றி கூறினார்.


Next Story