மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2023 4:30 AM IST (Updated: 22 Jun 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோரி மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் மேடை சார்பில் கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். முற்போக்கு மக்கள் மேடை நிர்வாகிகள் மணிகண்டன், சோழா மகேஷ், பெரியசாமி, செல்வம் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். தலித் உள்பட அனைத்து மக்களும் கோவிலுக்கு சென்று வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, தீண்டாமை ஆகியவற்றை ஆதரிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர்.


Next Story