மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொது செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநில பிரசார செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிறுவன பொதுச்செயலாளர் செல்வராஜ், மாநில தலைவர் ஜெயபிரகாஷ், மாநில துணை பொது செயலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாநில அமைப்பு செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story