வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்
பழனி அருகே அடிப்படை வசதி செய்து தராததை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொம்பு கட்டி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 2-வது வார்டில், குட்டைக்காடு என்னும் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு நீண்ட நாட்களாக குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு என அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பலமுறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் நேற்று 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
Related Tags :
Next Story