ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சடையாண்டி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர்கள் செல்லமுத்து, ராஜசேகரன், சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு அறிவித்தது போல் 3 சதவீத அகவிலைப்படியை உடனே முன் தேதியிட்டு வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு நிதி கூடுதலாக ரூ.147-ம், குடும்ப நலநிதி ரூ.70-ம் கூடுதலாக பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர்கள் தங்கவேலு, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story