வேகத்தடை அமைக்க வலியுறுத்தி போராட்டம்


வேகத்தடை அமைக்க வலியுறுத்தி போராட்டம்
x

வேகத்தடை அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு சிக்னல் அருகே வேகத்தடை இல்லாததால் அதிவேகமாக வரும் வாகனங்களால் தினமும் பொதுமக்கள் சாலை விபத்தில் சிக்கும் அவல நிலையை கண்டித்தும், கருணா நகர் மற்றும் ஸ்ரீநகரை இணைக்கும் ரோட்டில் வேகத்தடை இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி குழு சார்பில் நேற்று திருவானைக்காவல் பகுதியில் வேகத்தடை அமைக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு ஆட்டோ சங்க நிர்வாகி ராஜா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் சந்தானம், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட இடங்களில் வாகனங்களில் வேகத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.


Next Story