கருமாதி மண்டப பணிகளை தொடங்கக்கோரி காத்திருப்பு போராட்டம்
பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கருமாதி மண்டப பணிகளை தொடங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை ெரயிலடி மாப்படுகை சாலை காவிரி கிட்டப்பா பாலம் அருகில் கட்டப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள கருமாதி மண்டப பணியை உடனே தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்த போது ஒரு வாரத்துக்குள் அதே இடத்தில் கருமாதி மண்டபம் கட்டப்படும் என்று உறுதி அளித்தும் தற்போது வரை பணி தொடங்காமல் உள்ளது. எனவே உடனே பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தினர்.முன்னதாக போராட்டத்தை கைவிடும்படி மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.