காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி
களியக்காவிளை,
மத்திய பா.ஜ.க. அரசு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்ததை கண்டித்தும், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை குறைக்காததை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். விஜய்வசந்த் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் அம்பிளி உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story