காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி
ஓசூர்:-
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வீர.முனிராஜ், மாவட்ட பொருளாளர் மகாதேவன், ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு தலைவர் ஓ.பி.சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ், செல்வம், முத்தப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறுபான்மை பிரிவு நிர்வாகி அசேன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story