கூட்டுறவு சங்கத்தினர் அலுவலக சாவியை ஒப்படைக்கும் போராட்டம்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கத்தினர் அலுவலக சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கத்தினர் அலுவலக சாவியை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கியின் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் அலுவலக சாவி, விவசாய எந்திரங்களின் சாவியை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ஆனந்தன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு கோஷங்கள் எழுப்பியவாறு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் முருகேசனிடம் சாவி, மனுவை கொடுத்தனர். அப்போது மண்டல இணைப் பதிவாளர் முருகேசன் சாவியை பெற்றுக் கொள்ளாமல் அவர்கள் அளித்துள்ள மனுவை பரிந்துரைப்பதாக கூறினார். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story