விலை உயர்வை கண்டித்து பாலை கொட்டி போராட்டம்


விலை உயர்வை கண்டித்து பாலை கொட்டி போராட்டம்
x

விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சியினர் பாலை கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்


விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரத்தில் இந்து தேசிய கட்சியினர் பாலை கீழே கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலை உயர்வு

தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்வை கண்டித்தும் உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தநிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் இந்து தேசிய கட்சியினர் அதன் மாநில செயலாளர் ஹரிதாஸ் சர்மா தலைமையில் வந்தனர்.

இவர்கள் பால் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும், மின்கட்டண உயர்வினையும் திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆவின் பால் விலை உயர்வால் தனியார் நிறுவனங்களும் பால்விலையை உயர்த்தி விட்டன. இதனால் டீ, காபி போன்றவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக மக்கள் நிதிசுமையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

மனு

எனவே, பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஆவின் பாலை தரையில் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஹரிதாஸ் சர்மா தலைமையில் மாவட்ட பொதுசெயலாளர் வீராசாமி, நகர் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பால்விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என்று கோஷமிட்டவாறு கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.


Next Story