விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியனில் 37 பஞ்சாயத்துகளும் 101 கிராமங்களும் உள்ளன. இதில் பெரும்பாலான கிராம மக்கள் விவசாயத்தையே முதல் தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். வைகை அணையில் 35 ஆண்டுகளுக்குபிறகு தொடர்ந்து 6 மாதங்களாக வைகை அணையில் தண்ணீர் வந்தபோதும் நயினார்கோவிலுக்கு உட்பட்ட 35 கண்மாய்களுக்கு நீர் வந்து நிறைய வில்லை. வைகை அணையில் இருந்து செல்லும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதையடுத்து பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தென்மண்டல செயலாளர் மதுரை வீரன் பேசிய தாவது:- வைகை ஆற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதால் வைகை ஆற்றின் பகுதிகள் மிகவும் தாழ்வாகவும் அதை சுற்றியுள்ள கால்வாய்கள் மிகவும் மேடாகவும் காணப்படுவதால் வைகை ஆற்று தண்ணீர் கால்வாய் வழியாக ஏறி செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் வைகை ஆற்றில் இருந்து கடந்த 6 மாதங்களாக வைகை அணையில் இருந்து செல்லும் தண்ணீர் கடலில் கலக்கும் நிலைமை ஏற்பட்டுஉள்ளது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள கண்மாய்கள் காய்ந்து கிடக்கிறது. வரும்காலங்களில் விவசாய பணிகள் தொடரவேண்டும் என்றால் எங்கள் பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story