அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி சித்திரை திருவிழாவின்போது கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்று பகுதியில் திருட்டு மணல் அள்ளி சென்றுள்ளனர். அதில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் திருட்டு மணலை பறிமுதல் செய்ய கோரியும் பரமக்குடி வைகையாறு கரை முழுவதும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தியும் பரமக்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு அனைத்து கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் பசுமலை, மறத்தமிழர் சேனை நிறுவன தலைவர் புதுமலர் பிரபாகரன், இடது கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மதுரை வீரன், தென் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பெருமாள், ம.தி.மு.க. நகர் செயலாளர் சடாச்சரம், பொதுக்குழு உறுப்பினர் பழ.சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சரவண பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா, ஊழல் தடுப்பு இயக்கம் அருள் செலின் மேரி, தமிழ் புலிகள் மாவட்ட செயலாளர் ராஜா, தாய் தமிழர் கட்சி கணேசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராஜன், ஆம் ஆத்மி கட்சியின் நகர் செயலாளர் முத்துக்குமார், எஸ்.டி.பி.ஐ.சதக் அப்துல்லா, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் உள்பட பலர் பேசினர். இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.