கமுதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


கமுதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

கமுதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதியில் தமிழக அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகாமுனியசாமி கண்டன உரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சதன்பிரபாகர், முத்தையா, முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பெரியசாமி, அவைத்தலைவர் சேகரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் பசும்பொன் தமிழ்வாணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தோப்படப்பட்டி பூமிநாதன், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்மல்குமார், கூட்டுறவு சங்க தலைவர் கருமலையான், பம்மனேந்தல் கூட்டுறவு சங்க தலைவர் கருப்பசாமி பாண்டியன், பொந்தம்புளி ஊராட்சி தலைவர் ஆறுமுகம், ஓ.கரிசகுளம் ஊராட்சி தலைவர் செல்வம்மேரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story