பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா, சிறுகம்பையூரில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாம்பாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திருவாடானை மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்தபதி கார்த்திகேயன் தலைமையில் சிறுகம்பையூர் பா.ஜ.க. கிளை தலைவர் காளிமுத்து ஆகியோர் முன்னிலையில் ஏராளமான பெண்கள் உட்பட கிராம பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story