அரசு மணல் குவாரியை மூடக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


அரசு மணல் குவாரியை மூடக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

அரசு மணல் குவாரியை மூடக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ராமநாதபுரம்


திருவாடானை அருகே சிறுகம்பையூர் அரசு மணல் குவாரியில் அதிக மணல் அள்ளுவதால் உடனடியாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் தர்மர், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story