கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும்


கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும்
x

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில்: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் கலெக்டரிடம் கவுதமசிகாமணி எம் பி கோரிக்கை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதமசிகாமணி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத்திடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையடுத்து நடைபெற்ற விரும்பத்தகாத செயல் வேதனைக்குரியது. அந்தப் பள்ளி சமூக விரோதிகளால் சூறையாடப்பட்டு மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்கள் தீக்கரையாக்கப்பட்டது. இதனால் சுமார் 4 ஆயிரம் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட வழி வகை செய்வதோடு, மாற்று இடம் ஏற்பாடு செய்து அவர்களுக்கு கல்வி வழங்குதலையும் உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் படிப்பு தொடர ஏற்பாடு செய்து தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story