பொதுமக்கள் சாலைமறியல்
பள்ளிபாளையம் அருகே நூற்பாலை கழிவுநீர் சாக்கடை கால்வாயில் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
பள்ளிபாளையம்:-
பள்ளிபாளையம் அருகே வெப்படையை அடுத்த பாதரை பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் உள்ளன. அதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடைகளில் கலக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலப்பதை கண்டித்து பாதரை சாலையில் பொதுமக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வெப்படை போலீசார், குமாரபாளையம் தாசில்தார் தமிழரசி, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாக்கடைகளில் கழிவுநீரை வெளியேற்றும் நூற்பாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story