வாலாஜா அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்


வாலாஜா அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Feb 2023 10:15 PM IST (Updated: 9 Feb 2023 10:19 PM IST)
t-max-icont-min-icon

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாலாஜா அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வன்னிவேடு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புதிதாக செல்போன் டவர் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னை -சித்தூர் நெடுஞ்சாலையில் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story