புத்தாண்டையொட்டி கேக் வெட்டி பொதுமக்கள் கொண்டாட்டம்


புத்தாண்டையொட்டி கேக் வெட்டி பொதுமக்கள் கொண்டாட்டம்
x

புத்தாண்டையொட்டி கேக் வெட்டி பொதுமக்கள் கொண்டாடினார்கள்.

அரியலூர்

புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் நகரமெங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரியலூர் பஸ் நிலையம் அருகே போலீசார் சார்பில் பாதுகாப்பு புத்தாண்டு என்ற நோக்குடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பங்கேற்றனர்.


Next Story