சோழவரம் ஒன்றியத்தில் பயன்பாடு இல்லாத இடத்தில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார்


சோழவரம் ஒன்றியத்தில் பயன்பாடு இல்லாத இடத்தில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார்
x

சோழவரம் ஒன்றியத்தில் பயன்பாடு இல்லாத இடத்தில் சாலை அமைப்பதாக பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளூர்

சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்டிகாவனூர் கிராமம். இங்கு 1,150 பேர் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மக்கள் பயன்பாடு இல்லாத இடத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இங்கு இந்த சாலை அமைக்கும் பணி ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதை அறிந்து தேவையில்லாத இடத்தில் சாலை அமைக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என பண்டிகாவனூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தமண்ணனிடம் புகார் மனு அளித்தனர். அப்போது ஒன்றிய கவுன்சிலர் சாரதா ரவி, மகளிர் குழு தலைவி லட்சுமி உள்பட பலர் உடன் இருந்தனர். இந்த நிலையில் மனுவினை ஏற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஒன்றிய பொறியாளர் ஜெய்சங்கரை வரவழைத்து பொதுமக்கள் வழங்கிய மனுவின் மீது சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story