குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை


குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2023 10:22 AM GMT (Updated: 7 Aug 2023 11:51 AM GMT)

பேரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி. பேரம்பாக்கம் நல்லாத்தம்மன் கோவில் தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2017- 2018 நிதி ஆண்டில் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி குறைவான விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்று பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இதனை முறையாக பராமரிக்காத காரணத்தால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கிறது.

எனவே அந்த கட்டிடத்தை சுற்றி தற்போது முச்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. எனவே பேரம்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி வீணாகி கிடக்கும் இந்த நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story