மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மதுக்கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கோயம்புத்தூர்
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த வேட்டைக்காரன்புதூரில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஆனைமலை, ஒடையகுளம், சேத்துமடை, காளியாபுரம், சரளைபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனைக்கு அருகே மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் குடிபோதையில் மருத்துவமனைக்குள் நோயாளிகளுக்கு இடையூறாக படுத்து கிடக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சப்-கலெக்டர் உள்பட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மதுக்கடையை அகற்றவில்லை. அரசு மருத்துவமனைக்குள் மதுப்பிரியர்கள் போதையில் அட்டகாசம் செய்கின்றனர். பாட்டில்களை உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு வரவே அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. எனவே மதுக்கடையை விரைவாக அகற்ற வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story