பந்தலூர் நத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்-உடனடியாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை
பந்தலூர் நத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
பந்தலூர்
பந்தலூர் நத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
கழிவுநீர் கால்வாய்
பந்தலூர் நத்தம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். அந்த பகுதியில் குடியிருப்பை ஒட்டி கழிவுநீர் கால்வாய் மோசமான நிலையில் கிடந்தது. இதனால் கழிவுநீர் மேற்கொண்டு செல்லாமல் தேங்கி நின்றது. இதன்காரணமாக அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி நெல்லியாளம் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து அந்தப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டப்பட்டது.
சாலையோர மண் குவியல்
அதன்பின்னர் கான்கிரீட் கலவை கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளம் தோண்டபபட்ட மண் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதேபோல் குழந்தைகள் பள்ளத்திற்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே விரைவில் பணிகளை தொடங்கி கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று அப்பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.