தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குருவாலப்பர் கோவில் ஊராட்சி கொக்கரணை கிராமத்தில் சுமார் 3 தலைமுறையாக சமத்துவபுரமாக வாழ்ந்து வந்த ஏழை-எளிய மக்களின் வீடுகளை இடித்து இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் மின்சாரம் மற்றும் போதிய அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தியும், உட்கோட்டை ஊராட்சியில் உள்ள கரைமேட்டில் வசிக்கும் மக்களுக்கு தொகுப்பு வீடு, இலவச மின் இணைப்பு, தெரு விளக்கு, பொது கழிப்பிடம், சாலை வசதி, கறவை மாட்டு கடன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொக்கரணை கிராமத்தில் இடிக்கப்பட்ட வீடுகளில் இருந்து மின் இணைப்பு மீண்டும் கட்டணம் இல்லாமல் புதிய இடத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.