அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்


அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டி.மணியட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி

டி.மணியட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டம்

ஊட்டி அருகே கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட டி.மணியட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடைபாதை, தெருவிளக்கு, குடிநீர், குப்பை தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு அத்தியாவசியமான இடங்களில் அமைக்காமல், தேவையில்லாத இடத்தில் அமைப்பதாக கூறி ஊர்த்தலைவர் மூர்த்தி தலைமையில் பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் பிரமீளா, கவுன்சிலர் சதீஷ் குமார் ஆகியோர் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுடன், கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஊராட்சி துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, டி.மணியட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்ய ஊராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு, வேறு கிராமங்களுக்கு பணிகளை மாற்றி விடுகிறார். 2 மாதத்துக்கு ஒருமுறை மன்ற கூட்டம் நடைபெறுவது இல்ைல. அடுத்த வாரம் நடைபெறும் மன்ற கூட்டத்தில் டி.மணியட்டி கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய நிதி ஒதுக்கப்படும் என்றார். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நிதி வரவில்லை

ஊராட்சி தலைவர் ராஜமூர்த்தி கூறுகையில், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்டு 46 கிராமங்கள் உள்ளன. வளர்ச்சி பணிகளுக்கு போதுமான நிதி வருவது இல்லை. கிடைக்கும் நிதியை பல கிராமங்களுக்கு பிரித்து கொடுத்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். டி.மணியட்டி கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய கழிவுநீர் கால்வாய் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. மீண்டும் நிதி வந்தவுடன் பிற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார்.


Next Story