பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்


பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

குறைதீர் முகாம்

தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதத்தில் கீழக்காணும் இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி சித்தூர், பாம்பன், வட்டாணம், கஞ்சியேந்தல், இளம்செம்பூர், மூக்கையூர், அச்சங்குளம், கீழதில்லையேந்தல், ஓடக்கரை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் பயன்பெறலாம்

மேலும் ரேஷன் கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story