விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்


விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
x

விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர்

தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகளை செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு

தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த குடியிருப்பு வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது.பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் படையெடுக்கின்றன. குழுந்தைகள் வைத்திருப்போர் பெரும் அச்சத்தில் காணப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் பூச்சிகள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. குடியிருப்பில் உள்ள ஒரு சில வீடுகள் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏராளமான வீடுகள் காலியாக உள்ளன.

வீடுகளுக்குள் செல்லும் பூச்சிகள்

இந்த குடியிருப்பில் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என ஏராளமானோர் வசித்து வருகிறோம். குடியிருப்பை சுற்றிலும், செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் வந்து செல்கிறது. இந்த குடியிருப்பு பகுதியில் குழந்தைகளே ஏராளமாக உள்ளன. காலியாக காணப்படும் வீடுகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சென்று வருகின்றனர்.இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். காலியாக உள்ள வீடுகளை சிலர் சிறுநீர் கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பை சுற்றி காணப்படும் செடி, கொடிகளை அகற்றிவிட்டு தூய்மை செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story