கோவில்களில் பொது விருந்து


கோவில்களில் பொது விருந்து
x

திருவண்ணாமலை, ஆரணியில்கோவில்களில் பொது விருந்து நடந்தது.

திருவண்ணாமலை

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று பொது விருந்து நடைபெற்றது.

இதில் கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்கள் 300 பேருக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.

இதையடுத்து மக்களுடன் அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டார்.நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர். எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் ஜோதி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, அறங்காவலர்கள் மீனாட்சிசுந்தரம், ராசாராம், கோமதிகுணசேகரன், பெருமாள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவண்ணாமலை தேரடி வீதியில் மகாத்மா காந்தியின் சிலைக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.

இக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடந்தது. ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார்.

இதில் உடல் உழைப்பு மேம்பாட்டு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.அன்பழகன், நகரசபை உறுப்பினர் உஷாராணி மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எம்.பழனி, அறங்காவலர்கள் பரமேஸ்வரன், நவநீதம், சேகர் உள்பட பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமபந்தி விருந்து சாப்பிட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் சங்கர்ராம், கோவில் நிர்வாக அலுவலர் ம.சிவாஜி, கோவில் ஆய்வாளர் முத்துசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story