பூஜை பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்


பூஜை பொருட்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்
x

பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஆடிப்பெருக்கு விழா இன்று(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியில் புதுமண தம்பதிகள் நீர்நிலைகளில் மாலை விடுவதற்கும் மற்றும் பொதுமக்கள் சாமி கும்பிடுவதற்கும் தேவையான பூ, தேங்காய், பொறி, அவல், கடலை உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க திரண்டனர். ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர்.

இதனால் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினர். அரியலூரில் இருந்து விருத்தாசலத்திற்கும், விருத்தாசலத்தில் இருந்து அரியலூருக்கும் என கனரக வாகனங்களும், இலகுரக வாகனங்களும் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீர் செய்து வாகனங்களை அனுப்பினர்.


Next Story