பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்


பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சீர்காழியில் நாளை நடக்கிறது

மயிலாடுதுறை
காவல்துறை சார்பில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கான குறை தீர்க்கும் முகாம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஒயிட் பேலஸ் திருமண மண்டத்தில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடக்கிறது. முகாமில், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து சட்டம்-ஒழுங்கு குறித்த புகார் மனுக்களை பெறுகிறார். இதில், மயிலாடுதுறை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த முகாமில், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்ட போலீஸ் நிலையத்தை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


Next Story