ரெயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி


ரெயில்வே கேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதி
x

வாணியம்பாடியில் பராமரிப்பு பணிக்காக ரெயில்வே கேட் முன்னவிறிப்பின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருப்பத்தூர்

பராமரிப்பு பணி

பபராமரிப்பு பணிக்காக வாணியம்பாடி நியூடவுன் ரெயில்வேகேட் முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் அவதிபட்டனர்.

வாணியம்பாடி நியூ டவுன் செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இதன் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர்.

ரெயில்வரும்நேரத்தில் கேட் மூடப்படுவதால் நீண்டநேரம் காத்திருந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இந்த கேட்பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ெரயில்வே கேட் பகுதியில் சீரமைப்புரணி நடைபெறுகிறது.

ரெயில்வே கேட் மூடல்

இதற்காக நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென ெரயில்வே கேட்டை மூடிவிட்டு, ரெயில்வே நிர்வாகத்தினர் அங்கு தண்டவாள பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி வரையிலும் கேட் திறக்கப்படவில்லை. கேட் மூடப்படுவது குறித்து என்த ஒரு அறிவுப்பும் செய்யவில்லை.

முன்னறிவிப்பின்றி கேட் மூடப்பட்டதால் வழக்கம்போல பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் அந்த வழியாக வந்தனர். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் அவர்கள் கேட்டை கடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.


Next Story