விநாயகர் சதுர்த்தியை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டுகோள்


விநாயகர் சதுர்த்தியை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டுகோள்
x

விநாயகர் சதுர்த்தியை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கொண்டாட வேண்டும் என ேபாலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கரூர்

ஆலோசனை கூட்டம்

தோகைமலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைப்பது மற்றும் நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் தோகைமலை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விநாயகர் சிலைகளை வைத்து, நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைக்க வேண்டும், சிலைகளுக்கு ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தலாம்.

டி சர்ட்டுகள் பயன்படுத்தக்கூடாது

சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. இதற்கு மாறாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத நீர் சார்ந்த மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளில் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவைகளை பயன்படுத்த அனுமதி கிடையாது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் படி சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்படும். விநாயகர் ஊர்வலத்தின் போது சாதி அடையாளம் கொண்ட டி சர்ட்டுகள் அணிய அனுமதிக்கக் கூடாது என்று எடுத்து கூறப்பட்டது. இதில், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story