4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓட்டல் தொழிலாளிக்கு பொதுமக்கள் அடி-உதை


4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓட்டல் தொழிலாளிக்கு பொதுமக்கள் அடி-உதை
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளியை பொதுமக்கள் அடத்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் தொழிலாளியை பொதுமக்கள் அடத்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி-நேதாஜி நகர் வடக்கு பகுதியில் வசித்து வருபவர் சையத் லியாகத் (வயது 48). ஓட்டல் தொழிலாளி. இவருடைய குடும்பத்தினர் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். தனியாக இருந்த அவர் வெளியே சென்றபோது சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 4 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சிறுமி தன்னுடைய வீட்டிற்கு திரும்பியபோது சோர்ந்த நிலையில் இருந்ததால் பெற்றோர் விசாரித்தனர். அப்போது நடந்த சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுடன் சையத் லியாகத் வீட்டுக்கு சென்று அவரைர பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த வாணியம்பாடி நகர போலீசார் விரைந்து சென்று சையத்லியாகத்தை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story