பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்


பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கக்கோரி கலெக்டரிடம் வணிகர் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர் பிரேம்நாத், பொருளாளர் கலைமணி உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் பிரதான வழியை அடைத்து பொதுமக்களுக்கும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கும், வணிகர்களுக்கும் இடையூறாக அரசியல் கட்சிகளும், பிற அமைப்புகளும் காலை, மாலை இரு வேளைகளிலும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இதனால் பஸ்களை காலை 9 மணிக்குள்ளேயே பழைய பஸ் நிலையத்துக்கு வர விடாமல் போலீசார் தடுத்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதன் காரணமாக மாணவ- மாணவிகள், முதியோர்கள், வணிகர்கள் என அனைவரும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மிகுந்த சிரமத்துடன் நடந்து செல்கிறார்கள். அதேபோல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், கும்பகோணம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் சென்னை சாலை வழியாக திருப்பி விக்கிரவாண்டி புறவழிச்சாலையில் திருப்பி அனுப்புகிறார்கள். விழுப்புரம் நகரத்துக்கு வரும் பஸ்கள் அனைத்தையும் கோலியனூர் கூட்டுசாலையில் இருந்து விக்கிரவாண்டி புறவழிச்சாலை வழியாக திருப்பி புதிய பஸ் நிலையத்திற்கு அனுப்புகிறார்கள். இதனால் நகரத்துக்குள்ளே வர முடியாமலும், வெளியே செல்ல முடியாமலும் பொதுமக்கள், மாணவ- மாணவிகள், நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழைய பஸ் நிலைய வாயிலில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. இதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.


Next Story