தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை, ரிஷிவந்தியம் பகுதியில் தி.மு.க. சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலை வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் கல்வராயன்மலையில் உள்ள துரூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட பிரதிநிதி இன்னாடு அறிவுக்கரசு, ஒன்றியக்குழு துணை தலைவர் பாட்ஷா பி ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அவை தலைவர் குப்புசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான உதயசூரியன், தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கி பேசினா். இதில், மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி, ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணி, சேகர், பொருளாளர் மாயக்கண்ணன், இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ரிஷிவந்தியம்

இதேபோல் ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ரிஷிவந்தியத்தில் நடந்தது.

இதற்கு ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான பெருமாள் தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்கள் துரைமுருகன், பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் துரை மணிவேல் கலந்து கொண்டு தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கி பேசினார்.

இதில், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, நிர்வாகிகள் அண்ணாமலை, ராஜீவ் காந்தி, கண்ணன், சிவமுருகன், செல்வகுமார், சக்திவேல், சண்முகம், மீனா ஜெயக்குமார், திருமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story