செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

திண்டிவனத்தில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் சேடன்குட்டை பகுதியை சேர்ந்த காந்தா என்பவர் இடத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே செல்போல் கோபுரம் அமைக்கக்கூடாது என்று கூறினர். இதையடுத்து செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தனியார் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது.


Next Story