அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு
ஆனைமலை பேரூராட்சியில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை பேரூராட்சியில் அம்ருத் 2.0 குடிநீர் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனைமலை பேரூராட்சி
ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பொது மக்க ளின் குடிநீர் தேவைக்காக ஆனைமலை ஆழியாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதற்காக குடியிருப்புகளில் 3700 குடிநீர் குழாய்களும், 250 பொது குடிநீர் குழாய்களும் உள்ளன. இதனால் குறிப்பிட்ட சில வார்டுக ளில் சரியாக குடிநீர் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் ஆனைமலை பேரூராட்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் அம்ருத் 2.0 என்ற குடிநீர் திட்டம் வந்துள்ளது. இதற்கு மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 30 சதவீதம், பேரூராட்சி 20 சதவீதம் என மொத்தம் ரூ.18.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வீடுகளுக்கு குடிநீர்
இந்த திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என அறிய அளவீட்டுமானி பொருத்தப்பட உள்ளது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்திய போது நேற்று விளக்கம் அளிப்பதாக உறுதி அளித்தார்.
பொதுமக்கள் எதிர்ப்பு
அதன்படி சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மண்டல பேரூராட்சி உதவி இயக் குனர் துவரகநாத்சிங், பேரூராட்சி செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், செயல் அலுவலர் உமாராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அம்ருத் 2.0 என்ற குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து டெண்டரை ஒத்திவைக்குமாறு பொதுமக்கள் தெரிவித்த னர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு ஏ.டி.எஸ்.பி. பிருந்தா தலைமையில் ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
டெண்டர் ஒத்திவைப்பு
அப்போது பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார் கூறுகையில், அம்ருத் 2.0 திட்டம் பொதுமக்களுக்கு நன் மைக்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி அரசுக்கு தெரிவிக்கப் படும்.
மேலும் இந்த திட்டத்திற்கான டெண்டரை ஒத்திவைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.