மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி


மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி
x

கும்பகோணம் பகுதியில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

மா்ம காய்ச்சல்

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமானோர் காய்ச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட உடல் நலகோளாறு காரணமாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், காலநிலை மாற்றத்தால் வைரஸ் பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் பரவி வருவதால் பலருக்கு காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் ஒரு சிலர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

11 பேருக்கு டெங்கு

இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய் பாதிப்புக்கான காரணம் கண்டறியப்படும். இதுவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். காய்ச்சல் தலைவலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். மருந்து கடையில் மாத்திரை வாங்குவது, தாமாகவே முன்வந்து மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் ஆபத்தான சிகிச்சை முறைகளை கையாள்வது நோயை மேலும் அதிகப்படுத்தும்.

முககவசம் அணிய வேண்டும்

அந்த நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வது நோயாளியை முழுமையாக குணப்படுத்தாது. மேலும்பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொது இடங்களுக்கு வராமல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு முக கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் நோய் பரவலை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story