கட்டப்பஞ்சாயத்து பேசி ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தர்மபுரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கட்டப்பஞ்சாயத்து பேசி ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தர்மபுரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 27 Jun 2023 1:15 AM IST (Updated: 27 Jun 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

நல்லம்பள்ளி தாலுகா பூச்செட்டி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் நிலப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கட்டப்பஞ்சாயத்து பேசி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். எங்கள் குடும்பங்களின் நிகழ்ச்சிகளில் யாரும் பங்கேற்க கூடாது என்று கூறி அவர்கள் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story