சங்கராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


சங்கராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே காட்டுவன்னஞ்சூர் கிராமம் ஆயிஷா நகரை சேர்ந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஆயிஷா நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் ஏற்கனவே ஆபத்தான நிலையில் சிலிண்டர் குடோன் உள்ளது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியிலேயே செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் அதில் ஏற்படும் கதிர்வீச்சுகளால் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவருக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


Next Story