மணல் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் மனு


மணல் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் மனு
x

மணல் லாரிகளை மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் மனு அளிக்கப்பட்டது.

கரூர்

வாங்கல் கடைவீதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் வாங்கல் கடைவீதி பகுதியில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது மணல் லாரிகள் கடைவீதி வழியாக வேகமாக செல்வதால் பல தொல்லைகள் ஏற்படுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வாகன ஓட்டிகள், பெரியவர்களுக்கு சிறு சிறு விபத்துகள், இடையூறுகள் ஏற்படுகிறது. இதன்காரணமாக மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். ஆரம்ப கட்டத்தில் பள்ளிநேரம் போக மீதி நேரம் லாரிகள் ஓட்டுவதாக கூறினர். நாளடைவில் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக மணல் லாரிகள் ஓட்டி வருகிறார்கள். சுமார் 600 முதல் 700 லாரிகள் வரை மணல் எடுத்து செல்கிறார்கள். இந்த லாரிகள் கடைவீதி வழியாக வருவதை தடுத்து உடனடியாக மாற்றுவழி ஏற்படுத்தி மாற்றுப்பாதையில் அனுப்புமாறும், எங்களுடைய வாழ்வாதாரத்தையும், உடல்நலத்தையும் பாதுகாத்து தருமாறும் கேட்டுக்கொள்கிறோம், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story