பொதுமக்கள் போராட்டம்


பொதுமக்கள் போராட்டம்
x

தாராசுரம் மீன்மார்க்கெட் புதிய இடத்தில் மீன் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்

தாராசுரம் மீன்மார்க்கெட் புதிய இடத்தில் மீன் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் பகுதியில் தஞ்சை மீன் சாலையில் அமைந்துள்ள பஸ் நிறுத்தம் அருகே கடந்த பல ஆண்டுகளாக மீன்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மார்க்கெட் இருக்கும் இடத்தில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த மார்க்கெட்டை, தாராசுரம் கோ.சி.மணி நகர் செல்லும் முகப்பில் மாற்றி அமைப்பதற்கு மாநகராட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மார்கெட்டில் உள்ள மீன் வியாபாரிகள், கோ.சி.மணி நகர் முகப்பில் நேற்று திடீரென மீன் கடைகளை அமைத்தனர்.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த கோ.சி.மணி நகர் உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்டோர் கோ.சி. மணி நகர் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளுக்கு முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாநகராட்சி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்ட பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும், அதுவரை இந்த பகுதியில் மீன்மார்கெட் இயங்காது என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Related Tags :
Next Story