சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்


சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 6 Sept 2023 1:00 AM IST (Updated: 6 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு அருகே பஞ்ச நதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் இருந்து ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தி ஊராட்சி வரை உள்ள இணைப்பு சாலையை செப்பனிட்டு தார்ச்சாலையாக தரம் உயர்த்தும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையொட்டி சாலையில் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். இதை அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலையில் இருந்த தடுப்புகளை அப்புறப்படுத்தி மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story