சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


பாபநாசம் அருகே சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பாபநாசம் அருகே சாலையை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

தஞ்சை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை நீண்ட ஆண்டுகளாக சரி செய்யாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. ம

ேலும் பசுபதிகோவிலில் இருந்து திருப்பாலத்துறை வரை சாலைகள் செப்பனிடாமல் ெபாக்லின் எந்திரத்தை கொண்டு சாலையை செதுக்கியதால் பல்வேறு இடங்களில் குண்டும்,குழியுமாக காணப்படுகிறது.

இதனால் சாலையில் உள்ள மண் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக கூறி பாபநாசம் அருகே திருப்பாலைத்துறையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது சாலை சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் என்றும், சாலையில் தண்ணீரில் தெரிவித்து மண் பறக்காதப்படி சீரமைக்கும் பணி நடைபெறும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன.


Next Story