மக்கள் தொடர்பு திட்ட முகாம்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்
x

செங்கல்பட்டு வட்டம் திருவடிசூலம் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் 197 பயனாளிகளுக்கு ரூ.15.84 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக உலக வெறிநாய்க்கடி தடுப்பூசி தினத்தையொட்டி கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட துணை கலெக்டர் ஷஜிவனா, காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தானம், ஒன்றிய கவுன்சிலர் தரணிகோபி, திருவடிசூலம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி, மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் லட்சுமணன், செங்கல்பட்டு தாசில்தார் நடராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

1 More update

Next Story