பொதுமக்கள் சாலை மறியல்
லாலாபேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை
லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலையில் உரிமை கோரியும், கிராம எல்லையை மறு வரையறை செய்யக்கோரியும் நேற்று லாலாபேட்டை சாவடி அருகே பொன்னை மெயின் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதனையடுத்து சிப்காட் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் கோகுலன், கோடீஸ்வரன், ஜெயசீலன் மோகன், தேவேந்திரன், சுப்பிரமணி, எல்.வி.மணி உள்ளிட்ட பலர் மீது கிராம நிர்வாக அலுவலர் கல்யாண குமார் கொடுத்த புகாரின் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story