மழை காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மின்சார வாரியம் அறிவுறுத்தல்


மழை காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - மின்சார வாரியம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Nov 2023 1:20 AM GMT (Updated: 7 Nov 2023 1:40 AM GMT)

பஸ், லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ நிறுத்தக் கூடாது என்று மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

மழை, மின்னல், காற்று காலங்களில் பொது மக்கள் மின்சார கம்பங்களுக்கு செல்லும் மின்சார பாதை மற்றும் மின்மாற்றிக்கு அருகில் நிற்கவோ, செல்லவோ கூடாது. மின்மாற்றிகளிலோ அல்லது மின்கம்பத்திலோ பழுது ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி சரி செய்துக்கொள்ள வேண்டும்.

அறுந்து இருக்கும் மின்கம்பிகளை தொடக்கூடாது. அருகில் செல்லக் கூடாது. மற்றவர்களையும் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் சாதன பொருட்களை மட்டுமே வீ்டுகளில் பயன்படுத்த வேண்டும். பழுது ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பு ஏற்படும் வகையில் வீடு கட்டுமானங்களில் (இ.எல்.சி.பி.) நிலகசிவு மின்திறப்பான் கருவிகளை பொருத்த வேண்டும்.

மின் கம்பம் மற்றும் ஸ்டே (இழுவை) கம்பிகளில் ஆடு, மாடுகளை கட்டக் கூடாது. வீட்டில் துணி காயப்போடுவதற்காக கட்டும் கயிற்றின் மீது எந்த ஒரு மின் ஒயரையும் சுற்றி எடுத்துச் செல்லக் கூடாது. பஸ், லாரி போன்ற வாகனங்களை மின்மாற்றிக்கு அருகிலோ, மின்பாதைக்கு அருகிலோ, கீழ் பகுதியிலோ நிறுத்தக் கூடாது. மின் பழுது, மின் குறைபாடுகள் மற்றும் விபத்து குறித்து உடனடியாக அருகில் உள்ள மின் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story