விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கிணறு அமைக்கும் பணியை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு  கிணறு அமைக்கும் பணியை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்  அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2022 5:07 PM GMT (Updated: 21 Jun 2022 5:07 PM GMT)

விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு கிணறு அமைக்கும் பணியை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்



விழுப்புரம் நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட எருமணந்தாங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் கிணறு அமைக்கும் பணி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த மக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளாமல் குடியிருப்பு பகுதிகள் உள்ள சாலையின் ஓரமாக இந்த கிணறு தோண்டப்பட்டதால் அப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே எருமணந்தாங்கள் ஏரிப்பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு கழிவுநீர் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் ஏரியில் நேரடியாக கலப்பதால் நிலத்தடிநீர் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அப்பகுதி மக்கள், இங்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக மூடிவிட்டு செல்லுமாறு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story