பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

பத்தமடையில் பொதுமக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை கேசவசமுத்திரத்தில் உள்ள ஆயிரத்தம்மன் கோவிலில் கொடை விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி கோவில் நிர்வாகத்தினர் சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவில் வாடிபட்டி மேளம் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி பெறாததால் போலீசார் தடை விதித்ததாக கூறப்படுகிறது.

மேலும், கலைநிகழ்ச்சி குழுவினரையும் போலீசார் விசாரணைக்காக பத்தமடை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடை விழா நடத்தும் குழுவினர் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையம் முன் திரண்டனர். எனினும் போலீசார் அனுமதி வழங்காததால் பொதுமக்கள் நெல்லை-அம்பை பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வாடிபட்டி மேளம் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story